என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அமமுக அலுவகம்
நீங்கள் தேடியது "அமமுக அலுவகம்"
தேனி ஆண்டிப்பட்டியில் இயங்கி வந்த அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தகவல். #Andipatti #AMMK #Election2019 #ECRaid
தேனி:
ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அவ்விடத்திற்கு கூடுதலாக காவலர்களும், அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். அமமுக அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் வருமான சோதனை அதிகாரிகள் சோதனை செய்யதனர்.
அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்
வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு 8 மணி முதல் விடிய விடிய சுமார் 10 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் பணம் இருந்ததாக அதிகாரிகள் தகவல் அளித்தனர். மேலும் அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் உள்ளே நுழைய முயன்ற போது அவர்களை தடுத்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அமமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனி, சுமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
#Andipatti #AMMK #Election2019 #ECRaid
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். #Andipatti #Election2019
ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்
வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பணம் எண்ணும் பணி நடைபெற்று வரகிறது. #Andipatti #Election2019
×

X